Saturday, May 31, 2008

இந்தியா

என் குழந்தைக்கு ஓயாத இருமல் என்று child specialist ஒருவரிடம் (chennai kk nagar famous!) காட்டினோம். fees 200 கறந்து விட்டார். சிறிது நாள் கழித்து second checkup க்கு வரச் சொன்னார். போனோம். அப்போதும் மீண்டும் 200 ரூபாய். அப்போது போனில் ஒருவர் ஏதோ சந்தேகம் கேட்க, எதுவானாலும் நேரில் வாருங்கள் என்று advice தரப்பட்டது.
இன்னொரு தடவை வேறொரு child specialistஇடம் (இன்னொரு kk nagar famous) போக வேண்டிய சூழ்நிலை. fees 100தான். பரவாயில்லையே என நினைத்தேன். ஆனால் medicines billலில் சரிக் கட்டியிருந்தார். (பக்கத்திலேயே அவருடைய medical shop). அவரும் second checkupஇல் 100 ரூபாய்தான். ( பதினோரு மணிக்கு மேல் உயிரே போனாலும் பார்க்க மாட்டாராம்.)
என் மனைவி summer holidaysக்காக குழந்தைகளுடன் உடுமலைப்பேட்டை போயிருந்தாள். அங்கும் ஒருநாள் குழந்தைக்கு அதே இருமல் பிரச்னை வர, அங்கு ஒரு child specialist இடம் போக, அங்கு மரியாதையான treatment. கடைசியில் fees வெறும் 40 ரூபாய்தான். second checkupல் 20 ரூபாய்!
இந்தியா!

1 comment:

வடுவூர் குமார் said...

:-))
அது தான் இந்தியா.

Post a Comment