Thursday, May 15, 2008
சாத்தியக்கூறுகள்
கற்பனைக்கு எல்லைதான் எது? நீங்கள் கஷ்டப்பட்டு கட்டிய வீட்டை அரசாங்க அதிகாரி இடிக்க வருகிறார். காரணம் கேட்டால், அரசாங்கம் போடும் பெரிய சாலைக்கு இடையூறாக உங்கள் வீடு இருப்பதால்,வேறு வழி இல்லை என்கிறார். நீங்கள் நொந்து போய் பார்க்கும்போது, அருகில் ஒருவன் "கவலைப்படாதே, இன்னும் சிறிது நேரத்தில் உலகமே இடியப்போகிறது. நாங்கள் போடும் பிரபஞ்ச நெடுஞ்சாலைக்கு உங்கள் உலகம் இடையூறாக இருக்கிறது. அதனால் இதை இடிக்க வந்திருக்கிறோம்" என்கிறான் அந்த அந்நியன். இப்படி ஆரம்பிக்கிறது ஒரு கதை. probability theoryயை அடிப்படையாகக்கொண்டு புனையப்பட்ட அந்தக்கதை, கற்பனையின் உச்சக்கட்டம். முடிந்தால் படித்துப் பாருங்கள். பெயர் hitchhiker's guide to galaxy by douglas adams
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment