என் குழந்தைக்கு ஓயாத இருமல் என்று child specialist ஒருவரிடம் (chennai kk nagar famous!) காட்டினோம். fees 200 கறந்து விட்டார். சிறிது நாள் கழித்து second checkup க்கு வரச் சொன்னார். போனோம். அப்போதும் மீண்டும் 200 ரூபாய். அப்போது போனில் ஒருவர் ஏதோ சந்தேகம் கேட்க, எதுவானாலும் நேரில் வாருங்கள் என்று advice தரப்பட்டது.
இன்னொரு தடவை வேறொரு child specialistஇடம் (இன்னொரு kk nagar famous) போக வேண்டிய சூழ்நிலை. fees 100தான். பரவாயில்லையே என நினைத்தேன். ஆனால் medicines billலில் சரிக் கட்டியிருந்தார். (பக்கத்திலேயே அவருடைய medical shop). அவரும் second checkupஇல் 100 ரூபாய்தான். ( பதினோரு மணிக்கு மேல் உயிரே போனாலும் பார்க்க மாட்டாராம்.)
என் மனைவி summer holidaysக்காக குழந்தைகளுடன் உடுமலைப்பேட்டை போயிருந்தாள். அங்கும் ஒருநாள் குழந்தைக்கு அதே இருமல் பிரச்னை வர, அங்கு ஒரு child specialist இடம் போக, அங்கு மரியாதையான treatment. கடைசியில் fees வெறும் 40 ரூபாய்தான். second checkupல் 20 ரூபாய்!
இந்தியா!
Saturday, May 31, 2008
Thursday, May 22, 2008
இன்று ஒரு தகவல்
தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது. இப்படியே போனால் நாளை.... ஒரு கற்பனை உரையாடல்.... வருடம் 2015
அம்மா: ஏண்டா, நாளைக்கு முழு பந்த்தாம். இன்னைக்கே எல்லாம் வாங்கி வெச்சிக்கணும்.
பையன்: எல்லாம் வாங்கிட்டம்மா.
அம்மா: நல்ல பையன். ஆனா ஏதாவது மறந்திருப்பே. அரிசி, பருப்பு...
பையன்: வாங்கியாச்சு.
அம்மா: சமையல் எண்ணை... பால்...
பையன்: கவலைப்படாத. வாங்கியாச்சு.
அம்மா: பரவாயில்லையே. ஆனா ஒண்ணை கண்டிப்பா மறந்திருப்ப.
பையன்: நீ என்ன கேப்பேன்னு எனக்குத் தெரியும். நாளைக்குப் பேப்பர் வராது. அதானே. அதையும் இன்னைக்கே வாங்கிட்டேன். இல்லேன்னா அப்பா அடி பின்னிடுவாரு......
அம்மா: ஏண்டா, நாளைக்கு முழு பந்த்தாம். இன்னைக்கே எல்லாம் வாங்கி வெச்சிக்கணும்.
பையன்: எல்லாம் வாங்கிட்டம்மா.
அம்மா: நல்ல பையன். ஆனா ஏதாவது மறந்திருப்பே. அரிசி, பருப்பு...
பையன்: வாங்கியாச்சு.
அம்மா: சமையல் எண்ணை... பால்...
பையன்: கவலைப்படாத. வாங்கியாச்சு.
அம்மா: பரவாயில்லையே. ஆனா ஒண்ணை கண்டிப்பா மறந்திருப்ப.
பையன்: நீ என்ன கேப்பேன்னு எனக்குத் தெரியும். நாளைக்குப் பேப்பர் வராது. அதானே. அதையும் இன்னைக்கே வாங்கிட்டேன். இல்லேன்னா அப்பா அடி பின்னிடுவாரு......
Labels:
கற்பனை
Wednesday, May 21, 2008
பார்வை நிதானம்
unconscious power of mindஐப் பற்றி ஒரு புத்தகம். என்னதான் அறிவு மேலோங்கி இருந்தாலும், உள்ளுணர்ச்சிக்கு ஈடில்லைதான். ஒரு பந்தை catch பிடிக்கும்போது, உள் மனது எவ்வளவு துல்லியமாகக் கணக்குப் போடுகிறது. அதன் வேகம், புவி ஈர்ப்பு விசை, நாம் ஓட வேண்டிய வேகம்.... இதை எல்லாம் அறிவை வைத்து பெருக்கி, வகுத்துக் கொண்டிருந்தால் எவ்வளவு நேரம் ஆகும்? அதனால்தான் அவசரமாக முடிவு எடுக்க வேண்டிய நேரங்களில் அறிவு உபயோகப் படுவதில்லை. ஆனால் அங்கு உள் மனதை நம்பி(guessing), நாம் எடுக்கும் பல முடிவுகள் சரியாகவே இருக்கும். அதை நாம் இனம் கண்டு சரியாக வளர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் தெரிந்து கொள்ள படித்துப் பாருங்கள் gut feelings by Gerd Gigerenzer, (the intelligence of unconscious mind)
Labels:
புத்தகம்
Sunday, May 18, 2008
புள்ளிகளை வைத்துக் கோலம்
பொருளாதாரம் (economics) என்றாலே boreதான், இல்லையா? அதிலும் புள்ளிவிவரங்கள் தலைசுற்ற வைக்கும். ஆனால் அவைகூட எவ்வளவு சுவையானவை என்பது எழுதுவோர் எழுதினால் தெரியும். புள்ளிவிவரங்களுக்கு இடையே எப்படி சில உண்மைகளைக் கண்டுபிடிப்பது என்பதை இந்த புத்தகத்தில் மிக அழகாக சொல்லியிருக்கிறர் ஆசிரியர். புத்தகத்தின் பெயர் freakonomics by stephen dubner and steven levitt.
Labels:
பொருளாதாரம்
Thursday, May 15, 2008
சாத்தியக்கூறுகள்
கற்பனைக்கு எல்லைதான் எது? நீங்கள் கஷ்டப்பட்டு கட்டிய வீட்டை அரசாங்க அதிகாரி இடிக்க வருகிறார். காரணம் கேட்டால், அரசாங்கம் போடும் பெரிய சாலைக்கு இடையூறாக உங்கள் வீடு இருப்பதால்,வேறு வழி இல்லை என்கிறார். நீங்கள் நொந்து போய் பார்க்கும்போது, அருகில் ஒருவன் "கவலைப்படாதே, இன்னும் சிறிது நேரத்தில் உலகமே இடியப்போகிறது. நாங்கள் போடும் பிரபஞ்ச நெடுஞ்சாலைக்கு உங்கள் உலகம் இடையூறாக இருக்கிறது. அதனால் இதை இடிக்க வந்திருக்கிறோம்" என்கிறான் அந்த அந்நியன். இப்படி ஆரம்பிக்கிறது ஒரு கதை. probability theoryயை அடிப்படையாகக்கொண்டு புனையப்பட்ட அந்தக்கதை, கற்பனையின் உச்சக்கட்டம். முடிந்தால் படித்துப் பாருங்கள். பெயர் hitchhiker's guide to galaxy by douglas adams
Monday, May 12, 2008
ராமர் கோடு
ராமர் பாலத்தைக் கட்டியது ராமர்தான் என்றால்,அணில் முதுகில் கோடு இருப்பதற்கும் ராமர்தான் காரணமா? அது இயற்கையில் அமைந்தது என்றால் அடிக்க வந்தாலும் வருவார்களோ?
Friday, May 9, 2008
கண்ணை நம்பு
கண்ணை நம்பாதே. அறிவை மட்டும் நம்பு. எல்லாரும் இதைத்தான் சொல்கிறார்கள். ஆனால் இன்றைய உலகில் இது சாத்தியமில்லை. ஒவ்வொன்றையும் ஆராய்ந்து கொண்டிருக்க நமக்கு நேரமில்லை. அப்படியே ஆராய்ந்தாலும், தற்போதைய தகவல் உலகில் நாம் மூழ்கி மூச்சடைத்துப் போவோம். அதனால் நாம் உள் மனதை நம்ப வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். பல சமயங்களில் நம் உள்மனமும், கண்ணும் சொல்வது சரியாகவே இருக்கும். அதை வளர்த்துக் கொள்வது எப்படி? படியுங்கள் மால்கம் க்ளாடுவெல்லின் blink. ரொம்ம்ப சுவாரசியமாக இருக்கும்.
Wednesday, May 7, 2008
ஒழுங்கீனமே வெல்லும்
ஒழுங்கற்றதில் இருந்து ஒழுங்கிற்கு முன்னேறுவதுதான் theory of evolution. ஆனால் ஒழுங்கிலிருந்து ஒழுங்கற்றதுக்கு பின்னேறும் theoryஐக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இதன் சாராம்சம் பிரபஞ்சம் உடைந்து கொண்டிருக்கிறது. அதாவது order will not get formed from disorder. உடைந்த கண்ணாடி மீண்டும் என்றும் சரியாகாது. மேலும் தெரிந்து கொள்ள theory of entropy படியுங்கள். ரொம்ம்ப சுவாரசியமாக இருக்கும்.
Tuesday, May 6, 2008
எதிர் கீதை
நமக்கு கீதை தெரியும். ஆனால் எதிர் கீதை தெரியுமா?
கீதை சொல்வது
நடந்தது நன்றாகவே நடந்தது.
நடப்பது நன்றாகவே நடக்கிறது.
நடக்கப்போவது நன்றகவே நடக்கும் .
ஆனால் புதிய கீதை சொல்வது
நடந்தது மோசமாக நடந்தது .
நடப்பது மோசமாக நடக்கிறது.
நடக்கப்போவது மோசமாகவே நடக்கும்.
என்ன ஆச்சரியமாக இருக்கிறதா?
படியுங்கள் மர்பி'யின் விதிகள்.
ரொம்ம்ப சுவாரஸ்யமாக இருக்கும்.
கீதைக்கு எவ்வளவு possibility இருக்கிறதோ,
அவ்வளவு possibility இதற்கும் இருக்கிறது.
படித்துப் பயனடையுங்கள்.
கீதை சொல்வது
நடந்தது நன்றாகவே நடந்தது.
நடப்பது நன்றாகவே நடக்கிறது.
நடக்கப்போவது நன்றகவே நடக்கும் .
ஆனால் புதிய கீதை சொல்வது
நடந்தது மோசமாக நடந்தது .
நடப்பது மோசமாக நடக்கிறது.
நடக்கப்போவது மோசமாகவே நடக்கும்.
என்ன ஆச்சரியமாக இருக்கிறதா?
படியுங்கள் மர்பி'யின் விதிகள்.
ரொம்ம்ப சுவாரஸ்யமாக இருக்கும்.
கீதைக்கு எவ்வளவு possibility இருக்கிறதோ,
அவ்வளவு possibility இதற்கும் இருக்கிறது.
படித்துப் பயனடையுங்கள்.
Subscribe to:
Posts (Atom)