Saturday, August 20, 2011

நேர்மைத் திறமுமின்றி

அன்னா ஹசாரேவுக்குப் பின்னால் திரண்ட வட இந்தியக் கூட்டத்தையும், கொஞ்ச நாளைக்கு முன்னால் சமச்சீர் கல்விக்கு ஆதரவாக நம் தமிழ்நாட்டுக் கூட்டத்தையும் நினைத்துப் பார்க்கிறேன். அதன் ஆவேசத்தில் கால்பங்கு கூட இங்கு இல்லையே. இங்கு போனால் போகிறதென்று கோர்ட் உத்தரவு போட்டதால் நாம் தப்பித்தோம். ஆனால் அங்கு கோர்ட்டையே உத்தரவு போட வைக்கிறார்கள். நம் மக்களுக்கு நெஞ்சில் உரமும் நேர்மைத் திறமும் கொஞ்சம் குறைந்து விட்டதாகத் தோன்றுகிறது. தனியார் பள்ளி முதலாளிகளுக்கு எதிராக எனக்குத் தெரிந்தவரை பிரின்ஸ் கஜேந்திரபாபு மற்றும் சிலரைத் தவிர தீவிரமாய் செயல்பட்டவர்கள் யாரும் கண்ணுக்குத் தெரியவில்லை. பார்க்கப் போனால் மக்களின் ஆவேசத்தை விட பள்ளி நிர்வாகிகளின் 'தர்ம' ஆவேசம் அதிகமாக இருந்தது. அப்போது நம் மக்கள் எவ்வளவு கிள்ளுக் கீரைகளாக இருந்திருக்கிறார்கள்.  சகிப்புத் தன்மை அதிகமானதால் நம் ஆயுதங்கள் மழுங்கி விட்டன. ஆனால் சகிப்பின்மை அதிகமானபோது காந்திக்கு அஹிம்சையும் ஆயுதமானது.
 நாம் ஹிந்தி கற்றுக் கொள்ளாமல் இருக்கலாம். ஆனால் சில விஷயங்கள் ஹிந்தியைப் பார்த்துக் கற்றுக் கொள்ள வேண்டுமோ!

No comments:

Post a Comment