Wednesday, May 18, 2011

சட்டசபையை மாற்றுவது தவறல்ல

சட்டசபையை மாற்றுவதை சில பேர் எதிர்க்கிறார்கள்.  ஆனால் அவர்கள் ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். புதிதாய்க் கட்டப்பட்ட சட்டசபையில் என்னென்ன மர்மங்கள் ஒளிந்திருக்கின்றனவோ யாருக்குத் தெரியும். ஏதாவது சர்வைலன்ஸ் கேமராக்கள் ஒளித்து வைக்கப்பட்டிருக்கலாம். பேச்சுகள் ரகசியமாக ஒட்டுக் கேட்கப்படலாம், நிக்சனின் வாட்டர்கேட் போல. அந்தக் காலத்தில் ராஜாக்கள் சுரங்கப் பாதைகள் அமைத்திருப்பார்கள் தனக்கு மட்டுமே தெரியுமாறு. அந்த ரகசியங்கள் கட்டியவர்களுக்கே தெரியும்.அதனால் அந்த மர்மமாளிகையை தற்போது ஆளும்கட்சி சந்தேகப்படுவதில் தவறே இல்லை.

5 comments:

அன்னியன் said...

பிரமாதமான கற்பனை.

எந்த ஒட்டுக்கேட்புமில்லாமல், ஒட்டுக்கேட்கும் கருவியும் இல்லாமல் ஜெயலலிதாவின் ரகசியப் பேச்சுகள், விவாதங்கள் வெளிவரத்தான் செய்யும். ஏனென்றால், ஜெயுடன் இருப்பவர்களே அதைச்செய்வார்கள். இது எந்தக்கட்சி ஆட்சி செய்தாலும் நடக்கத்தான் செய்யும்.

இப்போது செல்லும் பழைய கட்டடத்திலும் ஒட்டுக் கேட்கலாம் ஐந்தாம்படைக்களைப்பயன்படுத்தி.

ஜெயலலிதாவின் போக்கு அவருக்கு இயறகையிலேயே வாய்த்த காழ்ப்புக்குணத்தை வெளிக்காட்டுகிறது. கருனானிதியின் மீது பார்ப்ப்னருக்கு இருக்கும் நெடுநாள் காழ்ப்புணர்வே பார்ப்ப்னர் ஜெயலலிதா காட்டுகிறார். 'இவன் கட்டி நான் எப்படி ஏற்றுக்கொள்ள ? நான் அந்த அளவுக்கு மட்டமா ?' என்ற ஈகோதான் ஒரே காரணம்.

இதே காழ்ப்புணர்வை எல்லாவிடயங்களிலும் காட்ட முடியாது. நிலைமை ரொம்ப மோசமாகி 'அம்மா' (அப்படித்தானே அடிமைகள் அவரை விளிக்கிறார்கள்?) அவுட்டாகி விடலாம். எடுத்துக்காட்டாக, மேம்பாலங்கள், பன்னாட்டு தொழில் நிறுவனங்கள். கருனானிதி செய்தவை இவை எனக்கு அவமானம் என்று நொறுக்க முடியாது.

ஜெயலலிதாவும் எது தேவையோ அங்குதான் ஈகோ பாரக்கமுடியும் !

Unknown said...

வித்தியாசமான பார்வை. அறிவியல் ரீதியான ஊழல் மன்னன் என்று சர்க்காரியா கமிஷன் பாராட்டைப் பெற்றவர், கலைஞர். இந்திராவுடன் கூட்டணி வைத்து சர்க்காரியா ஊழல் புகாரை ஒழித்துக் கட்டினார். ரகசியக் காமிரா/மைக் வைத்தாலும் வைத்திருப்பார். சென்னையில் போணியாகமாட்டோம் என்று தெரிந்துதானே திருவாரூர் சென்றுவிட்டார், கடந்த சட்டசபைத் தேர்தலில். நான் இருப்பதும் சென்னையில்தான். எனது மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள வேண்டுகின்றேன்.

சி.பி.செந்தில்குமார் said...

ஹா ஹா குட்

சுதா SJ said...

இப்படியெல்லாம் இருக்க வாய்ப்பில்லை என்றாலும்
இந்த விசயத்தில் கருணாநிதிமேல் சந்தேகப்படுவதில்
தப்பு இல்லை நண்பா
அவரு செய்தாலும் செய்வார் யார் கண்டா

சுதா SJ said...

ஜெயாவிடம் நேர்மையை எதிர்பாக்கும்
நேர்மை சிகாமணிகள்
தாத்தாவிடமும் அதை எதிர்ப்பார்க்க்கலாமே ??

Post a Comment