Monday, April 11, 2011

சுனாமியால் அழியாதவை

சுனாமிக்குப் பிறகு ஜப்பானில் லூட்டிங் எனப்படும் கொள்ளைகள் (ஆளில்லாத கடைகளில் கிடைத்ததை சுருட்டிக் கொண்டு ஓடுவது) நடைபெறவில்லை என்பதை எனது முந்தைய பதிவில் பார்த்தோம். இப்போது இன்னொரு செய்தி வெளியாகி உள்ளது.

சுனாமி ஏரியாக்களில் கண்டெடுக்கப்படும் தொலைந்து போன பொருட்களைத் திருப்பிக் கொடுக்கப்படுவது (அதுவும் போலீஸ் ஸ்டேஷனில்(!)) அதிகரித்து உள்ளது. திருப்பிக் கொடுக்கப்பட்ட பொருட்களால் குடோன்கள் நிரம்பி உள்ளது.
தொலைந்து போன பொருட்களை முக்கியமாக பணத்தை உரியவரிடம் திருப்பிச் சேர்க்கும் பணி போலீஸுக்கு அவ்வளவு சுலபமாக இல்லை(!). ஏதாவது பர்ஸ் அல்லது wallet இருந்தால் அட்ரஸ் ஓரளவுக்கு கண்டு பிடித்து விடலாம். ஆனால் வெறும் பணமாக இருந்தால் அது ரொம்ப கஷ்டமாக இருக்கிறதாம். அதையும் மீறி 10% பணத்தை திருப்பிக் கொடுத்து விட்டார்கள்.

அங்கு ஒரு சட்டம் உண்டு. மூன்று மாதத்துக்குள் யாரும் பணத்தை கிளெய்ம் பண்ணவில்லையென்றால், யார் கண்டு பிடித்துக் கொடுத்தாரோ அவரே திரும்ப வாங்கிக் கொள்ளலாம். அந்த திரும்ப வாங்கும் உரிமையையும் பல பேர் ரத்து செய்து விட்டார்கள்.

அதற்குப் பிறகு அந்தப் பணம் உயர் அதிகாரிகளிடம் அனுப்பப்பட இருக்கிறது. அது போக கிடைத்திருக்கும் unclaimed லாக்கர்கள் இன்னும் உடைக்கப்படவில்லை. அவைகளுக்குள் ஏகப்பட்ட நகைகள், ஷேர்கள், சொத்துப் பத்திரங்கள் இருக்கலாம் என அதிகாரிகள் ஊகிக்கிறார்கள். அவற்றை எல்லாம் என்ன செய்வது என்று இன்னும் முடிவாகவில்லை.
ஜப்பானுக்கு அன்னா ஹஸாரேக்கள் அதிகம் தேவைப்படாது போலிருக்கிறது. அது போல ஒரு சந்தேகம். அங்கு ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுத்தால் வாங்குவார்களா?

2 comments:

tamil cinema said...

நெகிழவைக்கும் செய்தி ...

அமைதி அப்பா said...

"அட பிழைக்கத் தெரியாத ஆட்களா இருப்பாங்க போல?!
அது சரி, எப்படி போறது ஜப்பானுக்கு?"


இப்படித்தான், இதுக்கு கமென்ட் போடனுன்னு நினைச்சேன். ஆனா, ஒரு நிமிஷம் நம்முடைய
நிலையை யோசித்ததில், உண்மையில் வெட்கப் படுகிறேன்.

Post a Comment