Saturday, April 2, 2011

இன்றைய கூகிள் சின்னம்

இன்றைக்கு கூகிளின் லோகோ, ஐஸ்கிரீம் சன்டே உருவான 119 வது வருட நினைவு நாள்.

119th Anniversary of the First Documented Ice Cream Sundae

இந்த sundae உண்மையிலேயே sundayதான். அந்தக் காலத்தில் ஐஸ்கிரீமில் புதுமைகளை புகுத்த எண்ணி சோடா வாட்டரில் ஐஸ்கிரீமைப் போட்டுக் கொடுத்திருக்கிறார்கள். அப்போது பொதுவாக sundayக்களில் மட்டும் ஐஸ்கிரீம் சாப்பிடுவார்கள். ஐஸ்கிரீமே தெரியாத அளவுக்கு சோடா நுரை மூடி விடுவதால், இது ஐஸ்கிரீமே அல்ல என்று சில பழமைவாதிகள் இதற்கு சட்டபூர்வமாகவே தடை விதித்து விட்டனர்.


ஆனால் இவான்ஸ்டன் என்ற ஊரில் சட்டத்தை மதித்து சோடாவை விட்டுவிட்டு நுரையில்லாமல் வேறு சில சிரப்புகளைகளை சேர்த்து விற்க ஆரம்பிக்க , விற்பனை சூடுபிடித்தது. அதனால் இது sodaless sunday soda என அழைக்கப்பட்டது. இது மற்ற நாட்களிலும் விற்பனை தொடர்ந்ததால் சில பேர் sunday என்று எப்படி சொல்லலாம் என்று கேட்க, ஒரு எழுத்து மாற்றப்பட்டு sundae ஆகியது.


இரு நகரங்கள் இதன் பிறப்புரிமைக்கு சொந்தம் கொண்டாடினார்கள். அவை இதாகா (Ithaca) மற்றும் இரு நதிகள் (Two Rivers). இந்த சன்டே சண்டையில் வென்றது இதாகா. ஏப்ரல் 5, 1892ல் பிளேட் என்பவர் கொடுத்திருந்த பேப்பர் விளம்பரம் இதற்கு ஆதாரமாக அமைந்தது. முதன்முதலாக இவர் 'செர்ரி சன்டே' யை உருவாக்கினார். தொடர்ந்து "ஸ்ட்ராபெர்ரி சன்டே", "சாக்லேட் சன்டே" போன்றவை உருவாக்கப்பட்டு புகழ்பெற்றன.

இது வரையில் வந்தவைகளில் மிகவும் காஸ்ட்லியான சன்டே, நியூயார்க்கில் தயாரிக்கப்பட்டது. அதன் விலை 1000 அமெரிக்க டாலர்கள்.

நன்றி விக்கிபீடியா


No comments:

Post a Comment