முதல் படத்தில், போதைப் பொருள்கள் கடத்துபவர்களைப் பற்றி விரிவாகச் சொன்னவர் இந்தப் படத்தில் அதிகார வர்க்கம் மற்றும் போலீஸின் கூட்டமைப்பில் பிரேசிலில் நடக்கும் ஊழல்களை அம்பலப் படுத்தியுள்ளார்.
இந்த இரண்டாம் பாகம் நமக்கு மிகவும் பிடிக்கும். ஏனென்றால் நம் ஊரில் நடப்பது போலவே இருக்கிறது. அதுவும் எலெக்ஷன் வரும் இந்த சமயத்தில் எல்லோரும் பார்க்க வேண்டிய படம்.
ஆயுதங்களைத் திருடியதாக வீண் பழியை சேரி மக்கள் மீது போட்டு விட்டு, அந்த சாக்கில் தேர்தலில் தில்லுமுல்லு செய்ய போலீஸ் படையை உள்ளே அனுப்புவது முதல் சட்டசபையில் கூலாக உட்கார்ந்து இருப்பது வரை எல்லா ஊர்களிலும் அரசியல்வாதிகள் ஒன்றுதான்.
முதல் படத்தில் வரும் கேரக்டர்களே இதிலும் வருவதால் அதைப் பார்த்து விட்டு இதைப் பார்த்தால் இன்னும் நன்றாக இருக்கும். படம் விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லை. இரண்டு படமுமே imdbயில் 8க்கு மேலேதான். இரண்டுமே record break collection.
1 comment:
raittu ரைட்டு பார்த்துடுவோம்
Post a Comment