Tuesday, February 22, 2011

வேதனை அளிக்கும் எட்டாவது அதிசயம்

உலக புராதான கழகம் எட்டாவது அதிசயமாக எதை அறிவித்து இருக்கிறது தெரியுமா?
மனிதன் இதுவரை உருவாக்கியவைகளிலேயே மிகவும் தாக்குப் பிடிப்பது மட்டும் அல்லாமல் வேகமாக வளர்ந்து வரக் கூடியதும், அதே சமயத்தில் நாம் பெருமைப்பட முடியாததுமாக இது இருந்து வருகிறது.

மற்ற ஏழு அதிசயங்களும் இதன் கம்பீரத்துக்கு முன்னால் கை கட்டி நிற்க வேண்டியதுதான்.

பல தலைமுறைகளாக இதன் கட்டுப்படுத்த முடியாத வளர்ச்சியை நாம் வியப்போடும் வேதனையோடும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

பல ஜாம்பவான்கள் இதை அழிப்பதற்காக படை எடுத்து தோற்றுப் போயிருக்கிறார்கள்.

இதைத் தொடங்கி வைத்தவர்கள் யூதர்கள் என்று சொல்லப்படுகிறது.

ஒவ்வொரு தலைமுறையிலும் இது வளர்ந்து கொண்டே வருவது ஆச்சரியம் அளிப்பதாக இருக்கிறது.

இந்தத் தலைமுறையில் இதன் வலிமை பல மடங்கு அதிகமாக இருக்கிறது. ஆனால் இம்முறை பல்லாயிரக் கணக்கான மக்களின் துணையுடன்(அழிவுடன்) இது வீழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதன் வளர்ச்சியை கீழ்க்கண்ட வரைபடத்தில் பாருங்கள்.


அந்த எட்டாவது அதிசயம் பணக்காரனுக்கும் ஏழைக்கும் உள்ள இடைவெளிதான்.




No comments:

Post a Comment