டாஸ்மார்க்கின் விற்பனை அமோகம் என்ற புள்ளிவிவரங்களுக்கு நடுவில்
, நேற்றும் முன்தினமும் குடித்துவிட்டு மூன்றுபேர் தற்கொலை செய்துள்ள விவரம் தினத்தந்தியில் வந்துள்ளது.
ஆவடியில் குடிபோதையில் போலீஸ்காரர் தீக்குளித்து சாவு.
தீபாவளியைக் குடும்பத்துடன்கொண்டாட முடியாத ஏக்கத்தில் வியாபாரி தற்கொலை.
குடித்துவிட்டு வேப்பமரத்தில் தூக்குப் போட்டு சாவு, மகனின் பிணத்தை சாக்குமூட்டையில் கட்டித் தூக்கி வந்த தந்தை.
மேல் சொன்ன எல்லாவற்றுக்கும் குடிப் பழக்கம்தான் காரணமாக இருந்திருக்கிறது. பிரச்னைகள் நிறைந்துள்ள நம் நாட்டில் குடி தேவையில்லாத ஒன்று என்றுதான் தோன்றுகிறது. நல்லவேளை. பெண்களுக்கு இப்பழக்கம் இல்லை!
எல்லாவற்றிலும் அட்வான்ஸாக இருக்கும் ஃபாரின்காரர்களுக்கு இது பெரிய பிரச்னை இல்லை. அவர்கள் அதிலும் அட்வான்ஸாகப் போய்போதைப் பிரச்னையில் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தேனுக்குள் விழுந்து திகைக்கும் எறும்புகள். ஆனால் நாம் இன்னும் புழுக்களைப் போல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அவர்கள் குடிப்பதைப் பற்றி ஜாலியாக ஹேங்க் ஓவர் படங்கள் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களை நாம் தேவையில்லாமல் காப்பியடித்தால் நாமும்
hang(to death)overதான்.
No comments:
Post a Comment