இரண்டு மணி நேரம் பொறுமையோடு பார்த்தால் ஒரு அற்புதமான அனுபவம் கிடைக்கும். நாய் வளர்த்தலைப் பற்றிய கதை. கடைசியில் அது இறந்து விடுகிறது. கதை இவ்வளவுதான். ஆனால் அதற்குள்ளே எவ்வளவு விஷயங்கள். ஒரு நல்ல கதை நம் subconscious mind குறி வைக்கிறது. அதனால்தான் படம் முடிந்தவுடன் மனது பாரமாகிறது. ஆனால் ஏன் என்று புரிவதில்லை.
ஹீரோ(oven Wilson) ஒரு columnist. மனைவி(Jennifer Anniston)யுடன் திருப்தியான வாழ்க்கை நடத்துகிறார். அவரும் ஒரு reporterதான். இவர்களுடைய கவிதையான வாழ்க்கையில் ஒரு கூடுதல் ஹைக்கூவாக ஒரு நாய்க் குட்டியை தத்து எடுத்து வளர்க்கிறார்கள். அது வீட்டை ரணகளப்படுத்துகிறது. அதன் over activenessஐ என்ன செய்தும் இவர்களால் கட்டுப்படுத்தவே முடிவதில்லை. ஒரு dog trainer(Kathleen turner)ஐயே அது என்ன என்று கேட்டு விடுகிறது. ஒரு நல்ல காரியம்கூட அது செய்வதில்லை. ஒரு வேலைக்காரப் பெண், அது ஒரு பிசாசு என்று கோபித்துக் கொண்டு போய் விடுகிறாள். ஒரு திருடனைக் கூட அது பிடித்துக் கொடுப்பதில்லை. கடலில் ஒன்றுக்குப் போய் இவர்களை ஃபைன் கட்ட வைக்கிறது. furnitureகளைக கடித்து உடைத்து விடுகிறது. மொத்தத்தில் அது ஒரு நல்ல ரோல் மாடல் இல்லை. காலம் இவ்வாறாக வளர்கிறது. நடுவில் இவர்களுக்கு மூன்று குழந்தைகள் பிறக்கின்றன. இரண்டு கருத்து வேறுபாடுகள் நடக்கின்றன. ஒரு வேலை மாற்றம் நிகழ்கின்றது. வயதாகிறது. நாய்க்கு முன்பு போல் எனர்ஜி இல்லை. மெல்ல மெல்ல நம் கண்முன்னாலேயே அது தன் முடிவை அடைகிறது. அவர்கள் அதற்கு கோயி்ல் ஸாரி சமாதி கட்டுகிறார்கள். படம் முழுக்க ஒரு வார்த்தை கூட பேசாமல் கடைசியில் நம் மனதை என்னவோ செய்கிறது.
ஒரு ஸ்பெஷல் குவாலிட்டிகூட இல்லாத ஒரு நாயை மையமாக வைத்து என்னதான் சொல்ல வருகிறார்கள். நாம் பார்க்காத தமிழ்ப்பட நாய்கர்களா! வெடிகுண்டுமேல் urine போய் செயலிழக்க செய்வது முதல் ஹீரோயின் நிலை கண்டு கண்ணீர் விட்டு அழும் அழுசேசன்கள் வரை எவ்வளவு வெரைட்டிகள் பார்த்திருக்கிறோம்! இதில் இயல்பான ஒரு நாயைக் காட்டியிருக்கிறார்கள். வர வர இயல்பான விஷயங்களைக் காட்டினாலே ஆச்சரியப்பட ஆரம்பித்து விட்டோம். நாய் இறந்த பிறகு ஹீரோ சொல்வதுதான் கதையின் மையம். நாய் நீங்கள் ஏழையா, பணக்காரனா என்று பார்க்காது. யார் தன்னிடம் அன்பு காட்டினாலும் அது அவர்களுக்காக உயிரையும் கொடுக்கும். நம்மையும் ஒரு rareஆன, specialஆன, முக்கியத்துவம் வாய்ந்த ஒருவனாக உணரச் செய்யும் தன்மை நாய்களுக்கு உண்டு. தன்னைத் தாழ்த்திக் கொண்டு, நம்மை உயர்த்தும் இந்தகுணம்தான் அதன் ஸ்பெஷாலிட்டி. இன்றைய உலகில் அது ரொம்ப அபூர்வமான விஷயம்தான்.
ஹாலிவுட்காரர்கள் என்றாலே பிரும்மாண்டம் என்ற விஷயத்தை இப்படம் உடைத்திருக்கிறது. 20th century Fox இதில் ஈடுபட்டிருப்பதும், Jennifer Anniston Owen Wilson போன்ற பெரிய ஆர்ட்டிஸ்ட்கள் நடித்திருப்பதும் இன்னும் ஆச்சரியம். Kathleen turner ஒரு சீனில் வந்து போகிறார். குரலை வைத்துதான் அடையாளம் தெரிகிறது. யதார்த்தமான டயலாக்குகளில் எவ்வளவு விஷயங்கள்! வாழ்க்கைக்கான டிப்ஸ்கள்! ஹீரோவின் மேலதிகாரியாக வருபவர் கடைசியில், நீ ஒரு அற்புதமானவன் என்று ஹீரோவிடம் சொல்லுவார். படமும் அப்படித்தான். சராசரியான வாழ்க்கையில் ஒளிந்திருக்கும் அது என்ன, yes மகத்துவத்தை உணர்த்தும் படம். பெற்றவர்களைக் கூட பாரமாக நினைக்கும் இந்தியர்களும் இருக்கிறார்கள். நாயைக்கூட கடைசிவரை காப்பாற்றும் அமெரிக்கர்களும் இருக்கிறார்கள். பில் கேட்ஸைப் போன்ற வாழ்க்கை நமக்கு வாய்க்கவில்லையே என்று ஏங்குவதைவிட, வாய்த்திருக்கும் வாழ்க்கையை ஏன் நல்லபடி வாழ நம்மால் முடியவில்லை என்று யோசிக்க வைக்கும் படம்.
No comments:
Post a Comment