Tuesday, October 27, 2009
கம்ப்யூட்டர் மூலம் ஓட்டு; ஏமாற்றுதல் சாத்தியமே
ரு அமெரிக்கப் பத்திரிக்கை கூறியுள்ளது. அதன் விவரம்.
Having followed this issue rather closely since 2006, the one thing I've learned is that there are no easy answers. Electronic voting machines have obvious advantages over lever-based machines, but they can also be manipulated. Savvy voters can hit a reset button on Sequoia voting machines that allows them to vote multiple times; determined political operatives could use the wireless capabilities of some machines to infect them with viruses that can swap votes -- and thus change the outcome in districts they know would go against their candidate; and entirely paperless machines provide no audit trail in case of a recount.
அதனால் இப்போது open source softwareஐக் கொண்டு இனிமேல் ஓட்டு எண்ணிக்கை நடத்தலாமா என்று அமெரிக்கா யோசித்து வருகிறது. ஏனென்றால் ஓபன் சோர்ஸ் முறையில் யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் மக்களே
ஓட்டுஎண்ணிக்கையை, நடக்கும்போதே live ஆகக் கண்காணிக்கும் வாய்ப்பு உள்ளது என்பதால், தவறுகள் நடக்காத ஒரு நம்பகமான முறையாக அது இருக்கும் என்று நம்பப்படுகிறது.அதில் accessability and securityஅதிகம்.
இங்கு விடுவார்களா நம் அரசியல்வாதிகள்?
Sunday, October 18, 2009
குடியின் மறுபக்கம்
, நேற்றும் முன்தினமும் குடித்துவிட்டு மூன்றுபேர் தற்கொலை செய்துள்ள விவரம் தினத்தந்தியில் வந்துள்ளது.
ஆவடியில் குடிபோதையில் போலீஸ்காரர் தீக்குளித்து சாவு.
தீபாவளியைக் குடும்பத்துடன்கொண்டாட முடியாத ஏக்கத்தில் வியாபாரி தற்கொலை.
குடித்துவிட்டு வேப்பமரத்தில் தூக்குப் போட்டு சாவு, மகனின் பிணத்தை சாக்குமூட்டையில் கட்டித் தூக்கி வந்த தந்தை.
மேல் சொன்ன எல்லாவற்றுக்கும் குடிப் பழக்கம்தான் காரணமாக இருந்திருக்கிறது. பிரச்னைகள் நிறைந்துள்ள நம் நாட்டில் குடி தேவையில்லாத ஒன்று என்றுதான் தோன்றுகிறது. நல்லவேளை. பெண்களுக்கு இப்பழக்கம் இல்லை!
எல்லாவற்றிலும் அட்வான்ஸாக இருக்கும் ஃபாரின்காரர்களுக்கு இது பெரிய பிரச்னை இல்லை. அவர்கள் அதிலும் அட்வான்ஸாகப் போய்போதைப் பிரச்னையில் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தேனுக்குள் விழுந்து திகைக்கும் எறும்புகள். ஆனால் நாம் இன்னும் புழுக்களைப் போல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அவர்கள் குடிப்பதைப் பற்றி ஜாலியாக ஹேங்க் ஓவர் படங்கள் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களை நாம் தேவையில்லாமல் காப்பியடித்தால் நாமும்
hang(to death)overதான்.
Saturday, October 17, 2009
பஞ்ச் டயலாக்
ஆயிரத்தில் ஒருவன். மதங்கொண்ட யானை என்ன செய்யும் தெரியுமா?
சினங்கொண்ட சிங்கத்திடம் தோற்றோடும்.
மூன்றுமுகம். என் பேரக் கேட்டா வயித்துல இருக்கற புள்ள வாய மூடும்.
என் பேரக் கேட்டா அது அம்மா வாயை
யும் சேத்து மூடும்
சிவாஜி. பன்னிதான் கூட்டமா வரும். சிங்கம் சிங்கிளாதான் வரும்
நாயகன். நாலு பேருக்கு நல்லது நடந்தா எதை செஞ்சாலும் தப்பில்ல.
சமீபத்தில் வந்த ஒரு ஆங்கிலப் படத்தில் ஒரு பஞ்ச் டயலாக் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. படம் Taken. ஹீரோ Liam Neesan. தன் மகளை கடத்தி வைத்திருக்கும் வில்லனிடம் ஹீரோ போனில் பேசுவது. அவர் ஒரு ரிடயர்ட் சிபிஐ ஆஃபீசர்.
I don't know who you are. I don't know what you want. If you are looking for ransom, I can tell you I don't have money. But what I do have are a very particular set of skills; skills I have acquired over a very long career. Skills that make me a nightmare for people like you. If you let my daughter go now, that'll be the end of it. I will not look for you, I will not pursue you. But if you don't, I will look for you, I will find you, and I will kill you.
Friday, October 16, 2009
Marley and me
இரண்டு மணி நேரம் பொறுமையோடு பார்த்தால் ஒரு அற்புதமான அனுபவம் கிடைக்கும். நாய் வளர்த்தலைப் பற்றிய கதை. கடைசியில் அது இறந்து விடுகிறது. கதை இவ்வளவுதான். ஆனால் அதற்குள்ளே எவ்வளவு விஷயங்கள். ஒரு நல்ல கதை நம் subconscious mind குறி வைக்கிறது. அதனால்தான் படம் முடிந்தவுடன் மனது பாரமாகிறது. ஆனால் ஏன் என்று புரிவதில்லை.
ஹீரோ(oven Wilson) ஒரு columnist. மனைவி(Jennifer Anniston)யுடன் திருப்தியான வாழ்க்கை நடத்துகிறார். அவரும் ஒரு reporterதான். இவர்களுடைய கவிதையான வாழ்க்கையில் ஒரு கூடுதல் ஹைக்கூவாக ஒரு நாய்க் குட்டியை தத்து எடுத்து வளர்க்கிறார்கள். அது வீட்டை ரணகளப்படுத்துகிறது. அதன் over activenessஐ என்ன செய்தும் இவர்களால் கட்டுப்படுத்தவே முடிவதில்லை. ஒரு dog trainer(Kathleen turner)ஐயே அது என்ன என்று கேட்டு விடுகிறது. ஒரு நல்ல காரியம்கூட அது செய்வதில்லை. ஒரு வேலைக்காரப் பெண், அது ஒரு பிசாசு என்று கோபித்துக் கொண்டு போய் விடுகிறாள். ஒரு திருடனைக் கூட அது பிடித்துக் கொடுப்பதில்லை. கடலில் ஒன்றுக்குப் போய் இவர்களை ஃபைன் கட்ட வைக்கிறது. furnitureகளைக கடித்து உடைத்து விடுகிறது. மொத்தத்தில் அது ஒரு நல்ல ரோல் மாடல் இல்லை. காலம் இவ்வாறாக வளர்கிறது. நடுவில் இவர்களுக்கு மூன்று குழந்தைகள் பிறக்கின்றன. இரண்டு கருத்து வேறுபாடுகள் நடக்கின்றன. ஒரு வேலை மாற்றம் நிகழ்கின்றது. வயதாகிறது. நாய்க்கு முன்பு போல் எனர்ஜி இல்லை. மெல்ல மெல்ல நம் கண்முன்னாலேயே அது தன் முடிவை அடைகிறது. அவர்கள் அதற்கு கோயி்ல் ஸாரி சமாதி கட்டுகிறார்கள். படம் முழுக்க ஒரு வார்த்தை கூட பேசாமல் கடைசியில் நம் மனதை என்னவோ செய்கிறது.
ஒரு ஸ்பெஷல் குவாலிட்டிகூட இல்லாத ஒரு நாயை மையமாக வைத்து என்னதான் சொல்ல வருகிறார்கள். நாம் பார்க்காத தமிழ்ப்பட நாய்கர்களா! வெடிகுண்டுமேல் urine போய் செயலிழக்க செய்வது முதல் ஹீரோயின் நிலை கண்டு கண்ணீர் விட்டு அழும் அழுசேசன்கள் வரை எவ்வளவு வெரைட்டிகள் பார்த்திருக்கிறோம்! இதில் இயல்பான ஒரு நாயைக் காட்டியிருக்கிறார்கள். வர வர இயல்பான விஷயங்களைக் காட்டினாலே ஆச்சரியப்பட ஆரம்பித்து விட்டோம். நாய் இறந்த பிறகு ஹீரோ சொல்வதுதான் கதையின் மையம். நாய் நீங்கள் ஏழையா, பணக்காரனா என்று பார்க்காது. யார் தன்னிடம் அன்பு காட்டினாலும் அது அவர்களுக்காக உயிரையும் கொடுக்கும். நம்மையும் ஒரு rareஆன, specialஆன, முக்கியத்துவம் வாய்ந்த ஒருவனாக உணரச் செய்யும் தன்மை நாய்களுக்கு உண்டு. தன்னைத் தாழ்த்திக் கொண்டு, நம்மை உயர்த்தும் இந்தகுணம்தான் அதன் ஸ்பெஷாலிட்டி. இன்றைய உலகில் அது ரொம்ப அபூர்வமான விஷயம்தான்.
ஹாலிவுட்காரர்கள் என்றாலே பிரும்மாண்டம் என்ற விஷயத்தை இப்படம் உடைத்திருக்கிறது. 20th century Fox இதில் ஈடுபட்டிருப்பதும், Jennifer Anniston Owen Wilson போன்ற பெரிய ஆர்ட்டிஸ்ட்கள் நடித்திருப்பதும் இன்னும் ஆச்சரியம். Kathleen turner ஒரு சீனில் வந்து போகிறார். குரலை வைத்துதான் அடையாளம் தெரிகிறது. யதார்த்தமான டயலாக்குகளில் எவ்வளவு விஷயங்கள்! வாழ்க்கைக்கான டிப்ஸ்கள்! ஹீரோவின் மேலதிகாரியாக வருபவர் கடைசியில், நீ ஒரு அற்புதமானவன் என்று ஹீரோவிடம் சொல்லுவார். படமும் அப்படித்தான். சராசரியான வாழ்க்கையில் ஒளிந்திருக்கும் அது என்ன, yes மகத்துவத்தை உணர்த்தும் படம். பெற்றவர்களைக் கூட பாரமாக நினைக்கும் இந்தியர்களும் இருக்கிறார்கள். நாயைக்கூட கடைசிவரை காப்பாற்றும் அமெரிக்கர்களும் இருக்கிறார்கள். பில் கேட்ஸைப் போன்ற வாழ்க்கை நமக்கு வாய்க்கவில்லையே என்று ஏங்குவதைவிட, வாய்த்திருக்கும் வாழ்க்கையை ஏன் நல்லபடி வாழ நம்மால் முடியவில்லை என்று யோசிக்க வைக்கும் படம்.