சட்டசபையை மாற்றுவதை சில பேர் எதிர்க்கிறார்கள். ஆனால் அவர்கள் ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். புதிதாய்க் கட்டப்பட்ட சட்டசபையில் என்னென்ன மர்மங்கள் ஒளிந்திருக்கின்றனவோ யாருக்குத் தெரியும். ஏதாவது சர்வைலன்ஸ் கேமராக்கள் ஒளித்து வைக்கப்பட்டிருக்கலாம். பேச்சுகள் ரகசியமாக ஒட்டுக் கேட்கப்படலாம், நிக்சனின் வாட்டர்கேட் போல. அந்தக் காலத்தில் ராஜாக்கள் சுரங்கப் பாதைகள் அமைத்திருப்பார்கள் தனக்கு மட்டுமே தெரியுமாறு. அந்த ரகசியங்கள் கட்டியவர்களுக்கே தெரியும்.அதனால் அந்த மர்மமாளிகையை தற்போது ஆளும்கட்சி சந்தேகப்படுவதில் தவறே இல்லை.