Tuesday, October 19, 2010

தியேட்டர் அராஜகம்

கமலா தியேட்டரில் எந்திரன் பார்க்கப் போயிருந்தோம். வெளியில் நாங்கள் வாங்கியிருந்த ஸ்நேக்ஸ் அயிட்டங்களை உள்ளே அனுமதிக்கவில்லை. தண்ணீர் மட்டும் கொண்டு போகலாமாம். இவன்கள் கேண்டீனில் மட்டும்தான் ஸ்நேக்ஸ் வாங்க வேண்டுமாம். வர வர மனிதனுக்கு ஒவ்வொரு அடிப்படை உரிமைகளும் பறி போய்க் கொண்டிருக்கின்றன. யாரும் கவலைப் படுவது போல் தெரியவில்லை. இதையெல்லாம் தட்டிக் கேட்க வேண்டிய அரசாங்கம் என்ன செய்கிறது என்றே தெரியவில்லை. இந்த மறைமுகமான பிரஷர் மிக மிகக் கேவலமான ஒன்று.

6 comments:

ப.கந்தசாமி said...

இது மகா அக்கிரமம். விலையாவது நியாயமாக இருக்கிறதா? பகல் கொள்ளை. அப்புறம் திருட்டு சி.டி. வருகிறது என்றால் ஏன் வராது?

ராம்ஜி_யாஹூ said...

திரை அரங்கு உள்ளே போயி வருஷம் ஆகின்றது

மதுரை சரவணன் said...

மார்டன் என்கிற பெயரில் நடக்கும் கொள்ளை...இதற்கு அனைவரும் உடந்தை.. அப்படிபட்ட தியேட்டர்களை ஒழிக்க வேண்டும் ஆகவே அனைவரும் ஒதுக்க வேண்டும். தட்டிக் கேட்ட(வெளிபடுத்திய) உங்களுக்கு அனைவர் சார்பாக வாழ்த்துக்கள்.

ramalingam said...

வருகைக்கு நன்றி திரு. டாக்டர், ராம்ஜி, சரவணன். இதைப் போலவே இன்னொரு கொடுமை அரசு பஸ்கள் நிறுத்தும் ஹோட்டல்கள். நாடு சர்வாதிகாரத்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது.

ராஜ நடராஜன் said...

நானும் ஒரு முறை பசிக்கு KFC வாங்கிட்டுப்போய் வாசல் கதவிலேயே விட்டு விட்டு ஓடினேன்.படம் தசாவதரம் என நினைக்கிறேன்.அந்த நிமிடத்தில் வாங்கின கோழி வெளியே காவல் காக்கிறதே என்ற கோபம் வந்தது.ஆனால் இப்ப நிதானமாக யோசித்துப்பார்க்கும் போது தியேட்டரில் உண்பது மற்றவர்களுக்கு தொல்லை என்பதும் மீண்டும் சுத்தப்படுத்த வேண்டிய சிரமங்களையும் தருகிறது என்பது புரிகிறது.

ஆனால் இந்த நல்ல நினைப்பை தியேட்டருக்குள்ள பாப்கார்ன்,பெப்சி வாங்கி கறுக் மொறுக் சத்தமெழுப்பு சட்டம் போங்கய்யா நீங்களும் உங்க தியேட்டருமென்று நீங்க சொல்றது சரிதான் என்று சொல்ல வைக்கிறது.

ramalingam said...

நடராஜன் சார், நான் கவலைப்படுவது, நம் உணவைப் பற்றிக் கவலைப்பட இவர்கள் யார். தியேட்டருக்குள் அசிங்கமாகிறது என்றால் நீயும் விற்காதே. குழந்தைகள் உணவைக் கூட இவர்கள் அனுமதிக்கவில்லை. நம் உரிமைகள் அநியாயத்துக்கு பறி போகின்றன.

Post a Comment