கமலா தியேட்டரில் எந்திரன் பார்க்கப் போயிருந்தோம். வெளியில் நாங்கள் வாங்கியிருந்த ஸ்நேக்ஸ் அயிட்டங்களை உள்ளே அனுமதிக்கவில்லை. தண்ணீர் மட்டும் கொண்டு போகலாமாம். இவன்கள் கேண்டீனில் மட்டும்தான் ஸ்நேக்ஸ் வாங்க வேண்டுமாம். வர வர மனிதனுக்கு ஒவ்வொரு அடிப்படை உரிமைகளும் பறி போய்க் கொண்டிருக்கின்றன. யாரும் கவலைப் படுவது போல் தெரியவில்லை. இதையெல்லாம் தட்டிக் கேட்க வேண்டிய அரசாங்கம் என்ன செய்கிறது என்றே தெரியவில்லை. இந்த மறைமுகமான பிரஷர் மிக மிகக் கேவலமான ஒன்று.