Friday, July 16, 2010

கலைஞர் டிவியில் மேட்ரிக்ஸ் ட்ரெய்லர்.

கலைஞர் டிவியில் இன்று மேட்ரிக்ஸ் படம் போட்டார்கள். ஒரு வாரமாக விளம்பரம் தூள் பறந்தது. கடைசியில் ஏண்டா பார்த்தோம் என்றாகி விட்டது. அந்த அளவுக்கு படத்தை கடித்துக் குதறி இருந்தார்கள். அதுவும் கிளைமேக்ஸில் தலைகால் புரியவில்லை. விளம்பரங்களை அதிகப்படுத்தி, காட்சிகளை கட் பண்ணி விட்டார்கள். அந்தப்படம் உண்மையிலேயே நல்ல அறிவியல் படம். ஒரு ட்ரெய்லர் பார்த்தது போல் இருந்தது. என்னைப் போல் எவ்வளவு பேர் ஏமாந்து இருப்பார்கள். வாழ்க கலைஞர் டிவியின் அறிவியல் தொண்டு.

No comments:

Post a Comment