நேற்று உண்மைக் கதைகளை ஒளிபரப்பும் ஒரு தமிழ் சேனலில் ஒரு பெண்ணின் கண்ணீர்க் கதையை விவரித்துக் கொண்டிருந்தார்கள். அந்தப் பெண்ணும் தான் ஏமாந்த கதையை பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார். ஒருவன் அந்தப் பெண்ணைக் கெடுத்து கையில் குழந்தையையும் கொடுத்து அனாதையாக்கி விட்டது பார்ப்பவர்களை உண்மையிலேயே மனம் கொதிக்க வைத்தது. பேட்டி எடுத்தவரும் வழக்கமான தன் வண்ண வண்ண உடைகளோடு கேள்விகளைப் போட்டு விஷயங்களை வாங்கிக் கொண்டிருந்தார். லட்சுமிக்கு சரியான மாற்று இவர். பல வீட்டு வண்டவாளங்கள், இவர் மூலம் தண்டவாளங்கள் ஏறி இருக்கின்றன. இந்த நிகழ்ச்சி என்றைக்கு விபரீதமாகப் போகிறதோ தெரியவில்லை. பிறகு முக்கியமான கட்டத்தில் சீரியல் போல தொடரும் போட்டு விட்டார்கள். அதற்கு அப்புறம் நடந்ததுதான் டாப்.
இன்றைய கேள்வி.
இந்தப் பெண்ணை ஏமாற்றியவன் பெயர்
1. ராமசாமி
2.குப்புசாமி
3.மாடசாமி
சரியான விடையை எஸ்.எம்.எஸ் செய்பவருக்கு.....
இதென்ன கேம் ஷோவா! அடச்சீ தமிழ்
இன்றைய கேள்வி.
இந்தப் பெண்ணை ஏமாற்றியவன் பெயர்
1. ராமசாமி
2.குப்புசாமி
3.மாடசாமி
சரியான விடையை எஸ்.எம்.எஸ் செய்பவருக்கு.....
இதென்ன கேம் ஷோவா! அடச்சீ தமிழ்