Showing posts with label கற்பனை. Show all posts
Showing posts with label கற்பனை. Show all posts

Thursday, May 22, 2008

இன்று ஒரு தகவல்

தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது. இப்படியே போனால் நாளை.... ஒரு கற்பனை உரையாடல்.... வருடம் 2015
அம்மா: ஏண்டா, நாளைக்கு முழு பந்த்தாம். இன்னைக்கே எல்லாம் வாங்கி வெச்சிக்கணும்.
பையன்: எல்லாம் வாங்கிட்டம்மா.
அம்மா: நல்ல பையன். ஆனா ஏதாவது மறந்திருப்பே. அரிசி, பருப்பு...
பையன்: வாங்கியாச்சு.
அம்மா: சமையல் எண்ணை... பால்...
பையன்: கவலைப்படாத. வாங்கியாச்சு.
அம்மா: பரவாயில்லையே. ஆனா ஒண்ணை கண்டிப்பா மறந்திருப்ப.
பையன்: நீ என்ன கேப்பேன்னு எனக்குத் தெரியும். நாளைக்குப் பேப்பர் வராது. அதானே. அதையும் இன்னைக்கே வாங்கிட்டேன். இல்லேன்னா அப்பா அடி பின்னிடுவாரு......