Wednesday, July 8, 2015

ஸ்கூல் வாசல் முன் பஸ்

அசோக்நகர் அரசினர் மகளிர் பள்ளியின் வாசலுக்கு முன் நான்கு நாட்களாக
ஒரு பஸ்ஸை நிறுத்தி விட்டு சென்று விட்டனர். ஸ்கூல் விட்டதும் பெண்பிள்ளைகள் வெளி வர முடியாமல் அவஸ்தைப் படுகின்றனர். போலீஸுக்குப் போன் செய்தும், பள்ளியின் உள்ளே கம்ப்ளெயிண்ட் செய்தும்
பிரயோஜனமில்லை. இந்த லட்சணத்தில் பஸ் நிறுத்தத்தில் நிறுத்த வேண்டிய எந்த பஸ்ஸூம் நிறுத்துவதில்லை. சிறு குழந்தைகள் ஓடிச் சென்று ஏமாறுகின்றனர். பார்க்க பரிதாபமாக இருக்கிறது. ஏண்டா அரசினர் பள்ளியில் சேர்த்தோம் என்று பெற்றோர்கள் வேதனைப்படுகிறார்கள்.

Monday, February 13, 2012

சாகப் போகும் கணவனுக்காக, பிரசவ வலியை...

நம் நாடு, மேல்நாட்டு மோகத்தில் தறிகெட்டுப் போய்க் கொண்டிருக்கும் இக்காலத்தில், ஒரு பெண் தன் கணவன் உயிர் இன்னும் ஒரு வாரத்தில் பிரியப் போகிறது என்று தெரிந்ததும் தன் பிரசவ வலியை முன்னுக்குத் தள்ளிப் போட்டு,  பிறந்த அக்குழந்தையை கணவனின் கைகளில் கொடுத்து சந்தோஷப்படுத்திய ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது. அதன் லிங்க் இங்கே.
http://digg.com/newsbar/topnews/texas_woman_induces_labor_two_weeks_early_so_her_dying_husband_could_hold_the_baby

Saturday, February 4, 2012

தினம் ஒரு குறள்

படிப்பதற்கு நேரமே இல்லையா? ஒரு நல்ல வழி இருக்கிறது. இந்த தளத்தில் பதிந்து விட்டால், தினமும் உங்கள் இ மெயிலுக்கு ஒரு அத்தியாயம் அல்லது பகுதி அனுப்பி வைக்கப்படுகிறது. நீங்கள் தனியாகவோ அல்லது குரூப்பிலோ சப்ஸ்க்ரைப் செய்து படிக்கலாம். நமது திருக்குறள் லிஸ்ட்டில் இருக்கிறது.

Wednesday, November 2, 2011

மீடியாக்களின் மனிதாபிமானம்

நேற்று உண்மைக் கதைகளை ஒளிபரப்பும் ஒரு தமிழ் சேனலில் ஒரு பெண்ணின் கண்ணீர்க் கதையை விவரித்துக் கொண்டிருந்தார்கள். அந்தப் பெண்ணும் தான் ஏமாந்த கதையை பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார். ஒருவன் அந்தப் பெண்ணைக் கெடுத்து கையில் குழந்தையையும் கொடுத்து அனாதையாக்கி விட்டது பார்ப்பவர்களை உண்மையிலேயே மனம் கொதிக்க வைத்தது. பேட்டி எடுத்தவரும் வழக்கமான தன் வண்ண வண்ண உடைகளோடு கேள்விகளைப் போட்டு விஷயங்களை வாங்கிக் கொண்டிருந்தார். லட்சுமிக்கு சரியான மாற்று இவர். பல வீட்டு வண்டவாளங்கள், இவர் மூலம் தண்டவாளங்கள் ஏறி இருக்கின்றன. இந்த நிகழ்ச்சி என்றைக்கு விபரீதமாகப் போகிறதோ தெரியவில்லை. பிறகு  முக்கியமான கட்டத்தில் சீரியல் போல தொடரும் போட்டு விட்டார்கள். அதற்கு அப்புறம் நடந்ததுதான் டாப். 


இன்றைய கேள்வி.
இந்தப் பெண்ணை ஏமாற்றியவன் பெயர்
1. ராமசாமி
2.குப்புசாமி
3.மாடசாமி
சரியான விடையை எஸ்.எம்.எஸ் செய்பவருக்கு.....

இதென்ன கேம் ஷோவா! அடச்சீ தமிழ்


Sunday, August 21, 2011

அண்ணா ஹசாரே, ஞாநி, சோ

ஜெயமோகனின் அருமையான கட்டுரையைப் படித்துப் பாருங்கள். அண்ணா ஹசாரே, ஞாநி, சோ

Saturday, August 20, 2011

நேர்மைத் திறமுமின்றி

அன்னா ஹசாரேவுக்குப் பின்னால் திரண்ட வட இந்தியக் கூட்டத்தையும், கொஞ்ச நாளைக்கு முன்னால் சமச்சீர் கல்விக்கு ஆதரவாக நம் தமிழ்நாட்டுக் கூட்டத்தையும் நினைத்துப் பார்க்கிறேன். அதன் ஆவேசத்தில் கால்பங்கு கூட இங்கு இல்லையே. இங்கு போனால் போகிறதென்று கோர்ட் உத்தரவு போட்டதால் நாம் தப்பித்தோம். ஆனால் அங்கு கோர்ட்டையே உத்தரவு போட வைக்கிறார்கள். நம் மக்களுக்கு நெஞ்சில் உரமும் நேர்மைத் திறமும் கொஞ்சம் குறைந்து விட்டதாகத் தோன்றுகிறது. தனியார் பள்ளி முதலாளிகளுக்கு எதிராக எனக்குத் தெரிந்தவரை பிரின்ஸ் கஜேந்திரபாபு மற்றும் சிலரைத் தவிர தீவிரமாய் செயல்பட்டவர்கள் யாரும் கண்ணுக்குத் தெரியவில்லை. பார்க்கப் போனால் மக்களின் ஆவேசத்தை விட பள்ளி நிர்வாகிகளின் 'தர்ம' ஆவேசம் அதிகமாக இருந்தது. அப்போது நம் மக்கள் எவ்வளவு கிள்ளுக் கீரைகளாக இருந்திருக்கிறார்கள்.  சகிப்புத் தன்மை அதிகமானதால் நம் ஆயுதங்கள் மழுங்கி விட்டன. ஆனால் சகிப்பின்மை அதிகமானபோது காந்திக்கு அஹிம்சையும் ஆயுதமானது.
 நாம் ஹிந்தி கற்றுக் கொள்ளாமல் இருக்கலாம். ஆனால் சில விஷயங்கள் ஹிந்தியைப் பார்த்துக் கற்றுக் கொள்ள வேண்டுமோ!

Wednesday, May 18, 2011

சட்டசபையை மாற்றுவது தவறல்ல

சட்டசபையை மாற்றுவதை சில பேர் எதிர்க்கிறார்கள்.  ஆனால் அவர்கள் ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். புதிதாய்க் கட்டப்பட்ட சட்டசபையில் என்னென்ன மர்மங்கள் ஒளிந்திருக்கின்றனவோ யாருக்குத் தெரியும். ஏதாவது சர்வைலன்ஸ் கேமராக்கள் ஒளித்து வைக்கப்பட்டிருக்கலாம். பேச்சுகள் ரகசியமாக ஒட்டுக் கேட்கப்படலாம், நிக்சனின் வாட்டர்கேட் போல. அந்தக் காலத்தில் ராஜாக்கள் சுரங்கப் பாதைகள் அமைத்திருப்பார்கள் தனக்கு மட்டுமே தெரியுமாறு. அந்த ரகசியங்கள் கட்டியவர்களுக்கே தெரியும்.அதனால் அந்த மர்மமாளிகையை தற்போது ஆளும்கட்சி சந்தேகப்படுவதில் தவறே இல்லை.

Wednesday, April 20, 2011

அபூர்வ ராகங்கள் (அ) அபூர்வ சகோதரர்கள் (அ) கலிகாலம்

இரட்டைக் குழந்தைகள் ஒரே சாயலைக் கொண்டிருக்க வேண்டியதில்லை. அதைப் போலவே ஒரே தந்தையைக் கூட கொண்டிருக்க வேண்டியதில்லை என்று ஒரு கேஸில் தெரிய வந்திருக்கிறது.
ஒரு பெண் வெளிநாட்டில் தன் இரட்டைக் குழந்தைகளுக்கு அப்பா இவர்தான் என்று ஒருவர் மேல் கேஸ் போட, அவரிடம் டெஸ்ட் எடுக்கப்பட்டபோது ரிசல்ட்டில் ஒரு குழந்தைக்கு மட்டுமே அவர் தந்தை என்று தெரிய வந்தது. இன்னெரு குழந்தைக்கு அவரது டிஎன்ஏ மேட்ச் ஆகவில்லை. வழக்கம் போல் டாக்டர்கள் இது ஒரு ரேர் கேஸ் (லட்சத்தில் ஒரு வாய்ப்பு) என்று கண்ணாடியைக் கழட்டியபடிசொல்லி விட்டார்கள். கருத்தரிக்கும் சமயத்தில் அடுத்தடுத்த நாட்களில் இருமுட்டைகள் fertilise ஆனால் இது போல வாய்ப்பு உண்டாம்.
இதில் டவுட் என்னவென்றால் அவர்கள் உடன்பிறந்த சகோதரர்களா (ஒரே அம்மா) அல்லது ஒன்று விட்ட சகோதரர்களா?(வேறு வேறு அப்பா)
same blood or half blood?
அப்புறம் அந்த அப்பா மற்றொரு குழந்தை மேல் அன்பு காட்டுவாரா? அல்லது அந்த அம்மா நடத்தை கெட்டவள் என்று (இதை விட என்ன சாட்சி) மொத்தமாக escape ஆகி விடுவாரா?

Monday, April 11, 2011

சுனாமியால் அழியாதவை

சுனாமிக்குப் பிறகு ஜப்பானில் லூட்டிங் எனப்படும் கொள்ளைகள் (ஆளில்லாத கடைகளில் கிடைத்ததை சுருட்டிக் கொண்டு ஓடுவது) நடைபெறவில்லை என்பதை எனது முந்தைய பதிவில் பார்த்தோம். இப்போது இன்னொரு செய்தி வெளியாகி உள்ளது.

சுனாமி ஏரியாக்களில் கண்டெடுக்கப்படும் தொலைந்து போன பொருட்களைத் திருப்பிக் கொடுக்கப்படுவது (அதுவும் போலீஸ் ஸ்டேஷனில்(!)) அதிகரித்து உள்ளது. திருப்பிக் கொடுக்கப்பட்ட பொருட்களால் குடோன்கள் நிரம்பி உள்ளது.
தொலைந்து போன பொருட்களை முக்கியமாக பணத்தை உரியவரிடம் திருப்பிச் சேர்க்கும் பணி போலீஸுக்கு அவ்வளவு சுலபமாக இல்லை(!). ஏதாவது பர்ஸ் அல்லது wallet இருந்தால் அட்ரஸ் ஓரளவுக்கு கண்டு பிடித்து விடலாம். ஆனால் வெறும் பணமாக இருந்தால் அது ரொம்ப கஷ்டமாக இருக்கிறதாம். அதையும் மீறி 10% பணத்தை திருப்பிக் கொடுத்து விட்டார்கள்.

அங்கு ஒரு சட்டம் உண்டு. மூன்று மாதத்துக்குள் யாரும் பணத்தை கிளெய்ம் பண்ணவில்லையென்றால், யார் கண்டு பிடித்துக் கொடுத்தாரோ அவரே திரும்ப வாங்கிக் கொள்ளலாம். அந்த திரும்ப வாங்கும் உரிமையையும் பல பேர் ரத்து செய்து விட்டார்கள்.

அதற்குப் பிறகு அந்தப் பணம் உயர் அதிகாரிகளிடம் அனுப்பப்பட இருக்கிறது. அது போக கிடைத்திருக்கும் unclaimed லாக்கர்கள் இன்னும் உடைக்கப்படவில்லை. அவைகளுக்குள் ஏகப்பட்ட நகைகள், ஷேர்கள், சொத்துப் பத்திரங்கள் இருக்கலாம் என அதிகாரிகள் ஊகிக்கிறார்கள். அவற்றை எல்லாம் என்ன செய்வது என்று இன்னும் முடிவாகவில்லை.
ஜப்பானுக்கு அன்னா ஹஸாரேக்கள் அதிகம் தேவைப்படாது போலிருக்கிறது. அது போல ஒரு சந்தேகம். அங்கு ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுத்தால் வாங்குவார்களா?

Saturday, April 2, 2011

இன்றைய கூகிள் சின்னம்

இன்றைக்கு கூகிளின் லோகோ, ஐஸ்கிரீம் சன்டே உருவான 119 வது வருட நினைவு நாள்.

119th Anniversary of the First Documented Ice Cream Sundae

இந்த sundae உண்மையிலேயே sundayதான். அந்தக் காலத்தில் ஐஸ்கிரீமில் புதுமைகளை புகுத்த எண்ணி சோடா வாட்டரில் ஐஸ்கிரீமைப் போட்டுக் கொடுத்திருக்கிறார்கள். அப்போது பொதுவாக sundayக்களில் மட்டும் ஐஸ்கிரீம் சாப்பிடுவார்கள். ஐஸ்கிரீமே தெரியாத அளவுக்கு சோடா நுரை மூடி விடுவதால், இது ஐஸ்கிரீமே அல்ல என்று சில பழமைவாதிகள் இதற்கு சட்டபூர்வமாகவே தடை விதித்து விட்டனர்.


ஆனால் இவான்ஸ்டன் என்ற ஊரில் சட்டத்தை மதித்து சோடாவை விட்டுவிட்டு நுரையில்லாமல் வேறு சில சிரப்புகளைகளை சேர்த்து விற்க ஆரம்பிக்க , விற்பனை சூடுபிடித்தது. அதனால் இது sodaless sunday soda என அழைக்கப்பட்டது. இது மற்ற நாட்களிலும் விற்பனை தொடர்ந்ததால் சில பேர் sunday என்று எப்படி சொல்லலாம் என்று கேட்க, ஒரு எழுத்து மாற்றப்பட்டு sundae ஆகியது.


இரு நகரங்கள் இதன் பிறப்புரிமைக்கு சொந்தம் கொண்டாடினார்கள். அவை இதாகா (Ithaca) மற்றும் இரு நதிகள் (Two Rivers). இந்த சன்டே சண்டையில் வென்றது இதாகா. ஏப்ரல் 5, 1892ல் பிளேட் என்பவர் கொடுத்திருந்த பேப்பர் விளம்பரம் இதற்கு ஆதாரமாக அமைந்தது. முதன்முதலாக இவர் 'செர்ரி சன்டே' யை உருவாக்கினார். தொடர்ந்து "ஸ்ட்ராபெர்ரி சன்டே", "சாக்லேட் சன்டே" போன்றவை உருவாக்கப்பட்டு புகழ்பெற்றன.

இது வரையில் வந்தவைகளில் மிகவும் காஸ்ட்லியான சன்டே, நியூயார்க்கில் தயாரிக்கப்பட்டது. அதன் விலை 1000 அமெரிக்க டாலர்கள்.

நன்றி விக்கிபீடியா


Friday, April 1, 2011

சுனாமி புது கிளிப்பிங்

சச்சினின் சாதனை முறியடிப்பு

சச்சின் போன போட்டியில் ஐந்து முறை உயிர் தப்பினார். ஆனால் அந்த சாதனை முறியடிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வந்துள்ளன.

Sachin's 'five lives' record broken!





















You thought Sachin's five lives against Pakistan is a record? Think again...
Midday cartoon

Sunday, March 20, 2011

கேப்டன் விட்டுக் கொடுப்பாரா?

அதிமுக அசைந்து கொடுக்க மறுக்கிறது. வைகோவுக்கு கவுரவப் பிரச்னை. மற்ற கட்சிகளுக்கோ குறைவான சீட்டுகள். இந்நிலையில் ஒரே ஒரு காரியம் செய்யலாம். முதலிலிருந்தே இந்த சண்டையில் நிதானமாக இருக்கும் (ஆனால் அவர் குடிகாரர் என்று புகார்!) கேப்டன் தனக்கான சில சீட்களை விட்டுக் கொடுக்கலாம். அதன் மூலம் மற்றவர்கள்தான் போதையில் இருப்பவர்கள் என்று நிரூபிக்கலாம்.

சைக்காலஜி ஆஃப் வைகோ

ஆங்கிலத்தில் self fulfilling prophecy என்பார்கள். ஒரு விஷயத்தை நம்ப ஆரம்பித்து, கடைசியில் நம் செயல்கள் அதை உண்மையாக்கி விடுவது. அது போல் வைகோவிற்கு 25 சீட்கள் அதிகம் என்று ஒதுக்கினார்கள். இப்போது அவர் மீது மக்கள் சிம்பதி சேர்ந்து உண்மையிலேயே அவரை அதற்கு தகுதி ஆக்கி விட்டன. இது அவர்கள் தெரிந்து செய்தார்களோ தெரியாமல் செய்தார்களோ இந்த டீலிங் எனக்குப் பிடித்து இருக்கிறது. வைகோவுக்கு இது பிளஸ்தான். அம்மா இந்த நாடகத்தை தெரிந்து செய்திருந்தால் உண்மையிலேயே புத்திசாலி. ஏனென்றால் எப்படியும் நாளை சமாதானமாகி விடுவார்கள். அப்போது வைகோவுக்கு சிம்பதி ஓட்டுகள் அதிகம் கிடைக்கும்.

Wednesday, March 16, 2011

சுனாமியிலும் நேர்மை

நம் ஆட்கள் சுனாமியிலும் ஸ்விம்மிங் போவோம் என்று வாய்ச் சவடால் அடித்துக் கொண்டிருக்கும் இந்நேரத்தில், ஜப்பானில் ஒரு விஷயம் எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது. இந்த மோசமான நிலையிலும் அங்கு கடைகளிலும் மற்ற இடங்களிலும் லூட்டிங் எனப்படும் கொள்ளை நடைபெறவே இல்லையாம். ஜப்பானியர்களின் இந்த நேர்மைக்கான காரணத்தை மற்ற நாடுகள் ஆராய்ந்து வருகின்றன. இதற்கும் அங்கு அராபிய நாடுகளைப் போல கடுமையான தண்டனை முறைகளும் இல்லை. இதற்கு அவர்களது கலாச்சார முறைதான் காரணம் எனக் கூறுகின்றனர். தங்கள் நாடு என்ற பெருமை, சுயமரியாதை என்பவை எல்லாம் அங்கு உண்மையிலேயே இருக்கும் போல இருக்கிறதே! இவற்றை நம் ஆட்களுக்குக் கொஞ்சம் கடன் கொடுத்தால் நன்றாக இருக்கும்.

Sunday, March 13, 2011

கமல் படம் காப்பியா?

சமீபத்தில் வந்த கமல் படம் ஹாலிவுட்டில் காப்பி அடிக்கப்பட்டுள்ளதா? சந்தேகம் இருந்தால் எனக்கு வந்த இந்தப் பாட்டைப் பார்க்கவும்.


Saturday, March 12, 2011

கலிவர்ஸ் டிராவல்ஸ்

சுனாமியின் கோரத் தாண்டவத்தின் பேரழிவின் புகைப்படங்களை ஒரு தொகுப்பாகப் போட்டிருக்கிறார்கள். அதன் பிரம்மாண்டத்தைப் பாருங்கள். நாம் கலிவரின் யாத்திரைகள் கதையில் கலிவராகத்தான் நம்மை உணர்ந்திருக்கிறோம். ஆனால் இயற்கை ஒரு கலிவராகவும், நாமெல்லாம் லில்லிபுட்களாகவும் இப்படங்கள் நம்மை உணர வைக்கின்றன. லிங்க் கீழே

Wednesday, March 9, 2011

சில பொருத்தமான ஜெஃப்ரி ஆர்ச்சர் டைட்டில்கள்.

ஜெஃப்ரி ஆர்ச்சர் எப்போதும் கதைக்கான தலைப்புகள் பிரமாதமாக வைப்பார். தற்போதைய சில நிகழ்ச்சிகளுக்கு ஜெஃப்ரி ஆர்ச்சரின் சில தலைப்புகள் பொருத்தமாக இருப்பது போல் தோன்றியது. உங்களுக்கு வேறு ஏதாவது தோன்றுகிறதா? ஆர்ச்சரா இல்லை டார்ச்சரா?

ராஜா- Prison diary vol 1 and 2

வீரமணி- As the crow flies

அன்புமணி- Paths of glory

ஸ்டாலின் and முக அழகிரி- First among equals

உதயநிதி and தயாநிதி அழகிரி- Sons of fortune

கனிமொழி- A prodigal daughter

கலைஞர்- False impression

ராஜினாமா நாடகம்- A twist in the tale அல்லது To cut a long story short

Honour among thieves- சொல்ல வேண்டியதில்லை.

மன்மோகன் சிங்-A quiver full of arrows

ராமதாஸ் - Cat of 9 tales

ஜெயலலிதா- The fourth estate(கொடநாடு எஸ்டேட் போல எதோ ஒரு எஸ்டேட்டா)

வைகோ- Not a penny more, not a penny less

சிபிஐ- Beyond reasonable doubt அல்லது Twelve red herrings(Red herring-திசை திருப்பல்கள்)

காங்கிரஸ் திமுக சமாதானம்- And thereby hangs a tale

ஸ்பெக்ட்ரம் உண்மையா?- Only time will tell









Friday, March 4, 2011

குடும்ப ஆட்சி

அன்பு செலுத்துபவர்கள் அல்லது விரும்புபவர்கள், மற்ற பொருட்களின் மதிப்பை குறைவாக எடை போடுகிறார்களாம். ஏனென்றால் அன்பை நேசிப்பவர்கள் அதன் மூலமே ஒருவித பாதுகாப்பு உணர்ச்சியை பெறுகிறார்களாம். அதனால் மற்ற பொருட்களை அவர்கள் அதிகம் சட்டை செய்வதில்லை. ஆனால் அன்பின் மேல் நம்பிக்கை இல்லாதவர்கள் பொருட்களை, பணத்தை மேலும் மேலும் சேர்ப்பதன் மூலம் மட்டுமே அந்தப் பாதுகாப்பு உணர்ச்சியை ஈடு கட்டுகிறார்களாம்.

இதனை ஆராய்ச்சியின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளார்கள். ஒரே பொருளை இரு பிரிவினரிடமும் கொடுத்து அவர்களை மதிப்பிடச் சொன்னபோது இது விளங்கியது. அதனால்தான் குடும்ப உறுப்பினர்களு்க்கிடையே கூட பாகப் பிரிவினையின்போது அவ்வளவு சண்டை வருகிறதாம். குப்பையான பொருள்களுக்குக் கூட அடித்துக் கொல்(ள்)கிறார்கள். எவ்வளவு கிடைத்தாலும் திருப்தியில்லை. ஆகவே இது ஒரு மனோதத்துவப் பிரச்னை என்பதைப் புரிந்து கொண்டு நம்மைத் திருத்திக் கொள்வோம். அதனால் இனிமேல் குடும்பத்தில் அன்பு ஆட்சி செய்யட்டும். அன்பின் அலைவரிசை(ஸ்பெக்ட்ரம்) பல லட்சம் கோடி மதிப்புடையது. முழுக் கட்டுரை கீழே. நான் ஆதாரமில்லாமல் பேசவில்லை.
The More Secure You Feel, the Less You Value Your Stuff

ScienceDaily (Mar. 3, 2011) — People who feel more secure in receiving love and acceptance from others place less monetary value on their possessions, according to new research from the University of New Hampshire.

The research was conducted by Edward Lemay, assistant professor of psychology at UNH, and colleagues at Yale University. The research is published in the Journal of Experimental Social Psychology.

Lemay and his colleagues found that people who had heightened feelings of interpersonal security -- a sense of being loved and accepted by others -- placed a lower monetary value on their possession than people who did not.

In their experiments, the researchers measured how much people valued specific items, such as a blanket and a pen. In some instances, people who did not feel secure placed a value on an item that was five times greater than the value placed on the same item by more secure people.

"People value possessions, in part, because they afford a sense of protection, insurance, and comfort," Lemay says. "But what we found was that if people already have a feeling of being loved and accepted by others, which also can provide a sense of protection, insurance, and comfort, those possessions decrease in value."

The researchers theorize that the study results could be used to help people with hoarding disorders.

"These findings seem particularly relevant to understanding why people may hang onto goods that are no longer useful. They also may be relevant to understanding why family members often fight over items from estates that they feel are rightfully theirs and to which they are already attached. Inherited items may be especially valued because the associated death threatens a person's sense of personal security," Lemay says.

The research was conducted by Lemay; Margaret Clark, Aaron Greenberg, Emily Hill, and David Roosth, all from Yale University; and Elizabeth Clark-Polner, from Université de Genève, Switzerland.

Email or share this story: