Wednesday, July 8, 2015

ஸ்கூல் வாசல் முன் பஸ்

அசோக்நகர் அரசினர் மகளிர் பள்ளியின் வாசலுக்கு முன் நான்கு நாட்களாக
ஒரு பஸ்ஸை நிறுத்தி விட்டு சென்று விட்டனர். ஸ்கூல் விட்டதும் பெண்பிள்ளைகள் வெளி வர முடியாமல் அவஸ்தைப் படுகின்றனர். போலீஸுக்குப் போன் செய்தும், பள்ளியின் உள்ளே கம்ப்ளெயிண்ட் செய்தும்
பிரயோஜனமில்லை. இந்த லட்சணத்தில் பஸ் நிறுத்தத்தில் நிறுத்த வேண்டிய எந்த பஸ்ஸூம் நிறுத்துவதில்லை. சிறு குழந்தைகள் ஓடிச் சென்று ஏமாறுகின்றனர். பார்க்க பரிதாபமாக இருக்கிறது. ஏண்டா அரசினர் பள்ளியில் சேர்த்தோம் என்று பெற்றோர்கள் வேதனைப்படுகிறார்கள்.

Monday, February 13, 2012

சாகப் போகும் கணவனுக்காக, பிரசவ வலியை...

நம் நாடு, மேல்நாட்டு மோகத்தில் தறிகெட்டுப் போய்க் கொண்டிருக்கும் இக்காலத்தில், ஒரு பெண் தன் கணவன் உயிர் இன்னும் ஒரு வாரத்தில் பிரியப் போகிறது என்று தெரிந்ததும் தன் பிரசவ வலியை முன்னுக்குத் தள்ளிப் போட்டு,  பிறந்த அக்குழந்தையை கணவனின் கைகளில் கொடுத்து சந்தோஷப்படுத்திய ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது. அதன் லிங்க் இங்கே.
http://digg.com/newsbar/topnews/texas_woman_induces_labor_two_weeks_early_so_her_dying_husband_could_hold_the_baby

Saturday, February 4, 2012

தினம் ஒரு குறள்

படிப்பதற்கு நேரமே இல்லையா? ஒரு நல்ல வழி இருக்கிறது. இந்த தளத்தில் பதிந்து விட்டால், தினமும் உங்கள் இ மெயிலுக்கு ஒரு அத்தியாயம் அல்லது பகுதி அனுப்பி வைக்கப்படுகிறது. நீங்கள் தனியாகவோ அல்லது குரூப்பிலோ சப்ஸ்க்ரைப் செய்து படிக்கலாம். நமது திருக்குறள் லிஸ்ட்டில் இருக்கிறது.

Wednesday, November 2, 2011

மீடியாக்களின் மனிதாபிமானம்

நேற்று உண்மைக் கதைகளை ஒளிபரப்பும் ஒரு தமிழ் சேனலில் ஒரு பெண்ணின் கண்ணீர்க் கதையை விவரித்துக் கொண்டிருந்தார்கள். அந்தப் பெண்ணும் தான் ஏமாந்த கதையை பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார். ஒருவன் அந்தப் பெண்ணைக் கெடுத்து கையில் குழந்தையையும் கொடுத்து அனாதையாக்கி விட்டது பார்ப்பவர்களை உண்மையிலேயே மனம் கொதிக்க வைத்தது. பேட்டி எடுத்தவரும் வழக்கமான தன் வண்ண வண்ண உடைகளோடு கேள்விகளைப் போட்டு விஷயங்களை வாங்கிக் கொண்டிருந்தார். லட்சுமிக்கு சரியான மாற்று இவர். பல வீட்டு வண்டவாளங்கள், இவர் மூலம் தண்டவாளங்கள் ஏறி இருக்கின்றன. இந்த நிகழ்ச்சி என்றைக்கு விபரீதமாகப் போகிறதோ தெரியவில்லை. பிறகு  முக்கியமான கட்டத்தில் சீரியல் போல தொடரும் போட்டு விட்டார்கள். அதற்கு அப்புறம் நடந்ததுதான் டாப். 


இன்றைய கேள்வி.
இந்தப் பெண்ணை ஏமாற்றியவன் பெயர்
1. ராமசாமி
2.குப்புசாமி
3.மாடசாமி
சரியான விடையை எஸ்.எம்.எஸ் செய்பவருக்கு.....

இதென்ன கேம் ஷோவா! அடச்சீ தமிழ்


Sunday, August 21, 2011

அண்ணா ஹசாரே, ஞாநி, சோ

ஜெயமோகனின் அருமையான கட்டுரையைப் படித்துப் பாருங்கள். அண்ணா ஹசாரே, ஞாநி, சோ

Saturday, August 20, 2011

நேர்மைத் திறமுமின்றி

அன்னா ஹசாரேவுக்குப் பின்னால் திரண்ட வட இந்தியக் கூட்டத்தையும், கொஞ்ச நாளைக்கு முன்னால் சமச்சீர் கல்விக்கு ஆதரவாக நம் தமிழ்நாட்டுக் கூட்டத்தையும் நினைத்துப் பார்க்கிறேன். அதன் ஆவேசத்தில் கால்பங்கு கூட இங்கு இல்லையே. இங்கு போனால் போகிறதென்று கோர்ட் உத்தரவு போட்டதால் நாம் தப்பித்தோம். ஆனால் அங்கு கோர்ட்டையே உத்தரவு போட வைக்கிறார்கள். நம் மக்களுக்கு நெஞ்சில் உரமும் நேர்மைத் திறமும் கொஞ்சம் குறைந்து விட்டதாகத் தோன்றுகிறது. தனியார் பள்ளி முதலாளிகளுக்கு எதிராக எனக்குத் தெரிந்தவரை பிரின்ஸ் கஜேந்திரபாபு மற்றும் சிலரைத் தவிர தீவிரமாய் செயல்பட்டவர்கள் யாரும் கண்ணுக்குத் தெரியவில்லை. பார்க்கப் போனால் மக்களின் ஆவேசத்தை விட பள்ளி நிர்வாகிகளின் 'தர்ம' ஆவேசம் அதிகமாக இருந்தது. அப்போது நம் மக்கள் எவ்வளவு கிள்ளுக் கீரைகளாக இருந்திருக்கிறார்கள்.  சகிப்புத் தன்மை அதிகமானதால் நம் ஆயுதங்கள் மழுங்கி விட்டன. ஆனால் சகிப்பின்மை அதிகமானபோது காந்திக்கு அஹிம்சையும் ஆயுதமானது.
 நாம் ஹிந்தி கற்றுக் கொள்ளாமல் இருக்கலாம். ஆனால் சில விஷயங்கள் ஹிந்தியைப் பார்த்துக் கற்றுக் கொள்ள வேண்டுமோ!

Wednesday, May 18, 2011

சட்டசபையை மாற்றுவது தவறல்ல

சட்டசபையை மாற்றுவதை சில பேர் எதிர்க்கிறார்கள்.  ஆனால் அவர்கள் ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். புதிதாய்க் கட்டப்பட்ட சட்டசபையில் என்னென்ன மர்மங்கள் ஒளிந்திருக்கின்றனவோ யாருக்குத் தெரியும். ஏதாவது சர்வைலன்ஸ் கேமராக்கள் ஒளித்து வைக்கப்பட்டிருக்கலாம். பேச்சுகள் ரகசியமாக ஒட்டுக் கேட்கப்படலாம், நிக்சனின் வாட்டர்கேட் போல. அந்தக் காலத்தில் ராஜாக்கள் சுரங்கப் பாதைகள் அமைத்திருப்பார்கள் தனக்கு மட்டுமே தெரியுமாறு. அந்த ரகசியங்கள் கட்டியவர்களுக்கே தெரியும்.அதனால் அந்த மர்மமாளிகையை தற்போது ஆளும்கட்சி சந்தேகப்படுவதில் தவறே இல்லை.